கன்னடர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்காதா? சித்தராமையா கேள்வி

கன்னடர்களுக்கு இலவச தடுப்பூசி கிடைக்காதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-10-23 22:10 GMT
பெங்களூரு, 

பீகாரில் தேர்தல் முடிவை பொறுத்து இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த தொற்று நோய் மத்திய அரசுக்கு ஒரு கவலையாக இருக்க வேண்டாமா?. இதுபற்றி பிரதமர் என்ன சொல்ல வேண்டும்?. கர்நாடகத்தில் தற்போதைக்கு சட்டசபை தேர்தல் இல்லை. அதனால் கன்னடர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்காதா?.

கன்னடர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் என்று தைரியமாக கேட்க கர்நாடகத்தில் 25 பா.ஜனதா எம்.பி.க்கள், முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மாநில தலைவர் ஆகியோருக்கு முதுகெலும்பு உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அல்லது பா.ஜனதா தலைவர், சட்டசபை தேர்தலுக்கு வழிவகுப்பாரா?. இலவச கொரோனா தடுப்பூசி என்று அரசு அறிவிக்கும் என்ற அறிவிப்புக்காக கன்னடர்கள் காத்திருக்கிறார்கள்.

வாக்குறுதி அளிப்பாரா?

பிரதமர் மோடி சார்பில் கர்நாடக பா.ஜனதா தலைவர் மக்களுக்கு உறுதி அளிப்பாரா?. அல்லது எடியூரப்பா அரசுக்கு எதிராக சதிசெய்து கவிழ்த்துவிட்டு, அடுத்து வரும் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா தலைவர் வாக்குறுதி அளிப்பாரா?.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்