கீழ்வேளூர் அருகே, சாராயம் கடத்திய 4 பேர் கைது - மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-10-23 22:15 GMT
சிக்கல்,

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் ஆழியூர் பிரிவு சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகூர் அருகே மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்த ராமன் மகன் மணிகண்டன் (வயது23), தெத்தி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் உமாபதி (19) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பெருங்கடம்பனூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெருங்கடம்பனூரை சேர்ந்த தனபால் மகன் நிதிஷ்குமார் (20), அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் விஜய் (19) என்பதும், சாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிஷ்குமார், விஜய் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்