முதல் முறையாக சிவசேனா தசரா பொதுக்கூட்டம் வேறு இடத்தில் நடக்கிறது

சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டம் முதல் முறையாக சிவாஜி பாா்க் அல்லாத வேறு இடத்தில் நடைபெற உள்ளது.

Update: 2020-10-24 23:06 GMT
மும்பை, 

சிவசேனா கட்சியை கடந்த 1966-ம் ஆண்டு பால்தாக்கரே தாதர், சிவாஜிபார்க் மைதானத்தில் தொடங்கினார். இதையடுத்து ஆண்டு தோறும் சிவசேனா சார்பில் சிவாஜி பார்க் மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ளும் தசரா பொதுக்கூட்டம் சிவசேனா கட்சியின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிவசேனா தொடங்கப்பட்ட பிறகு முதல் முறையாக அந்த கட்சியின் தசரா பொதுக்கூட்டம் சிவாஜிபார்க் அல்லாத வேறு இடத்தில் நடைபெற உள்ளது.

வீர சாவர்க்கர் அரங்கம்

சிவசேனாவின் தசரா பொது கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிவாஜி பார்க் மைதானம் எதிரில் உள்ள வீரசாவர்க்கர் அரங்கில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த கூட்டத்தில் மந்திரிகள் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் சிவாஜி பார்க்கில் உள்ள பால்தாக்கரே நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் மாலை 7 மணியளவில் வீர சாவர்க்கர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றுகிறார். முதல்-மந்திரியின் பேச்சு சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

மேலும் செய்திகள்