டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து ரூ.10 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-10-27 06:30 GMT
திருவாரூர், 

திருவாருர் அருகே உள்ள காட்டூரில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த 24-ந்தேதி இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்றுமுன்தினம் காலை கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு மற்றும் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடைக்குள் சென்று பார்த்த போது மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் பாண்டியன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு திருட்டு நடைபெற்ற இடத்தில் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருடப்பட்ட பீர் மற்றும் மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.10 ஆயிரம் என தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்