திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

Update: 2020-10-30 03:27 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், மணவாளநகர், ஒண்டிகுப்பம், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, அரண்வாயல், திருமழிசை, வெள்ளவேடு, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி, திருவாலங்காடு, சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றின் கிளை ஆறான நந்தனம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுருட்டப்பள்ளி தடுப்பணை நிரம்பி வழிந்தது.

மீஞ்சூர்

மீஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பழவேற்காடு, பொன்னேரி, காட்டூர், மணலிபுதுநகர் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 

மேலும் செய்திகள்