38 மாத சம்பளம் கேட்டு ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 38 மாத நிலுவை சம்பளத்தை உடனே வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-06 03:45 GMT
காரைக்கால், 

கடந்த 38 மாத நிலுவை சம்பளத்தை உடனே வழங்கக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை ஊழியர் சங்கத்தலைவர் ரகமத் பாஷா தலைமை தாங்கினார். போராட்டக்குழு தலைவர் மனோகர் முன்னிலை வகித்தர்ர். ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 70 கூட்டுறவு ரேஷன் கடைகளில் 120 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 38 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும், ரேஷன் கடைகளை உடனே திறக்க வேண்டும் அல்லது ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்