வத்திராயிருப்பில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-18 11:00 GMT
வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு வருவாய் துறை அலுவலகத்திற்கு முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதம் உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமும் அரசு உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலையில் இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். அரசு துறைகளில் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கும் முகாமினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், நடமாடும் வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி, விவசாய சங்க தாலுகா செயலாளர் மணிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்