நெல்லை, தென்காசியில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தூத்துக்குடியில் 52 பேர் குணமடைந்தனர்

நெல்லை, தென்காசியில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-11-21 00:28 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேர். பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 2 பேர். இதுதவிர அம்பை, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 679 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள். தென்காசி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது.

52 பேர் குணமடைந்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 52 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 212 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 135 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்