கோரிக்கை அட்டை அணிந்து கிராம உதவியாளர்கள் போராட்டம்

அலங்காநல்லூர் பகுதியில் கோரிக்கை அட்டை அணிந்தபடி கிராம உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-22 14:26 GMT
அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் பகுதியில் வாடிப்பட்டி தாலுகா அளவிலான தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் கருப்பையா தலைமையில் செயலாளர் முருகன், பொருளாளர் அழகுபாண்டி, மாநில இணைச் செயலாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7ஆயிரத்து 850 வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

போராட்டம்

பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்கள் ஓய்வூதிய குறைபாடுகளை நீக்குவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பணி செய்தவாறு ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, வருகிற 26, 27-ந் தேதிகளில் கருப்பு கொடி அணிந்து பணி செய்வது, டிசம்பர் மாதம் 4-ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது, டிசம்பர் 12-ந் தேதி முதல் பணிகளை புறக்கணிப்பு செய்வது போன்ற 4 கட்ட போராட்டங்களை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்