உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: கோவில்பட்டியில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 100 பேர் கைது

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-24 16:57 GMT
கோவில்பட்டி, 

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். அவர் நாகை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, அவரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் முருகேசன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 100 பேரை கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்