பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு 10 கிலோ அரிசி வீதம் வழங்க வேண்டும்.

Update: 2020-11-26 14:56 GMT
ஈரோடு, 

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு 10 கிலோ அரிசி வீதம் வழங்க வேண்டும். புதிய வேளாண்மை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4ஜி சேவையை உடனடியாக தொடங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் மற்றும் மணியன், ஜெயராமன், மணிபாரதி, குழந்தைசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்