சிறப்பாக பணியாற்றிய அஞ்செட்டி கிளை நூலகருக்கு விருது கலெக்டர் வழங்கினார்

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் நூலகர்களுக்கு மாவட்ட வாரியாக டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

Update: 2020-11-29 04:05 GMT
கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் நூலகர்களுக்கு மாவட்ட வாரியாக டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது வழங்கும் போது, விருதிற்கான நற்சான்றிதழ், 50 கிராம் வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி நூலகத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கலந்து கொண்டு சிறந்த நூலகராக தேர்வு செய்யப்பட்ட அஞ்செட்டி கிளை நூலகத்தில் பணிபுரியும் மூன்றாம் நிலை நூலகர் பழனிக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசுக்கான காசோலை மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வழங்கினார். இதே போல் நூலக இயக்கம் வளர முனைப்புடன் பணியாற்றிய ஓசூர் வாசகர் வட்ட தலைவர் ஜெகநாதனுக்கு நூலக ஆர்வலர் விருது, பாராட்டு கேடயத்தை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, ஓசூர் கிளை நூலகர் ரேணுகாசக்திவேல் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்