நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 440 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு, 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-12-01 04:48 GMT
நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக உயர்ந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-

சென்னை-465, ஐதராபாத்-434, விஜயவாடா-444, மைசூரு-450, மும்பை-478, பெங்களூரு-450, கொல்கத்தா-504, டெல்லி-480.

முட்டைக்கோழி கிலோ ரூ.71-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.8 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.63 ஆக சரிவடைந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கார்த்திகை தீபத்திருவிழா

கார்த்திகை தீபத்திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் முட்டை விற்பனை சற்று உயர்ந்து உள்ளது. இதேபோல் வடமாநிலங்களிலும் குளிர் காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் என பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்