சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சனிப்பிரதோஷத்தையொட்டி சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-12-13 00:35 GMT
லாலாபேட்டை, 

சனிப்பிரதோஷத்தையொட்டி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. அதன் ஒருபகுதியாக லாலாபேட்டை சிவன்கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே நன்செய்புகளூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபகவானுக்கும் பால், விபூதி, மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் துளசி மற்றும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந் தது. இதேபோல் தோட்டக்குறிச்சி சொக்கலிங்கநாதர் கோவில், நன்னீயூர்புதூர் சிந்தாமணி ஈஸ்வரர் கோவில், மண்மங்கலம் மரகதஈஸ்வரர் கோவில், திருமாநிலையூர் சவுந்திரநாயகி ஈஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தோகைமலை

தோைகமலை அருகே ஆர்டிமலையில் பிரசித்தி பெற்ற விராச்சிலைரீஸ்வரர் கோவில் உள்ளது. இதையொட்டி அர்ச்சகர் கந்தசுப்பிரமணியன் தலைமையில் நந்திபகவானுக்கு பால், தயிர், விபூதி, குங்குமம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் போன்ற பூஜை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல தோகைமலையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சின்னரெட்டிபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர் கோவில், கழுகூர் கஸ்பாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், இடையப்பட்டி ெரத்தினகிரீஸ்வரர் கோவில உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல்

நொய்யல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி கோவிலை 3 முறை வலம் வந்தார்.பின்னர் பக்தர்களுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். அதேபோல் நொய்யல் அருகே குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், திருக்காடுதுறையில் மாதேஸ்வரன் உடனுறை மாதேஸ்வரி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

மேலும் செய்திகள்