கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு

கடலூர் தாழங்குடாவில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-01-01 06:27 GMT
கடலூர்,

கடலூரில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் தாழங்குடா பகுதியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கும் மேல் எழுந்து, ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து சுமார் 30 அடி தூரத்துக்கு அலைகள் கரையை தாண்டி வந்தன. மேலும் கடல் சீற்றத்தால் தாழங்குடாவில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

மண் அரிப்பு

இதற்கிடையே கடல் சீற்றத்தால் மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த படகுகளை டிராக்டர்கள் மூலம் இழுத்து சென்று மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். இதேபோல் தேவனாம்பட்டினம் பகுதியிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் சில்வர் பீச்சுக்கு சென்ற பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

மேலும் செய்திகள்