சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சி.ஐ.டி.யு.) பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.

Update: 2021-01-06 23:18 GMT
பெரம்பலூர்,

மத்திய- மாநில அரசுகளை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தினர் (சி.ஐ.டி.யு.) பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக முன்கூட்டியே அறிவித்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் நேற்று பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று காலையில் மழை பெய்ததால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு.வின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். முதலாளிகளுக்கு ஆதரவான, தொழிலாளர், விவசாய சட்டங்களை மத்திய -மாநில அரசுகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும். கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் குடும்ப நபர்கள் அனைவருக்கும் தலா 10 கிலோ அரிசி, கோதுமை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்