உளுந்தூர்பேட்டையில் 14,161 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 14 ஆயிரத்து 161 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Update: 2021-01-08 05:17 GMT
உளுந்தூர்பேட்டை,


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 14 ஆயிரத்து 161 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல், வட்டார வீடுகட்டும் சங்க தலைவர் மணிராஜ், நகர கூட்டுறவு சங்க தலைவர் துரை, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், அரசு மாதிரி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயராமன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஏகாம்பரம், செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராமலிங்கம், நிர்வாகிகள் லயன் வெங்கடேசன், சாய் அருண், சியாமளா ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்