மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடர் மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம்; இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடர்மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இழப்பீ்டு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-01-10 23:36 GMT
தொடர் மழையால், விளைந்த நெல் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ள காட்சி
நெற்கதிர்கள் நீரில் மூழ்கின
மீஞ்சூர் ஒன்றியம் வேளுர், காட்டூர், செங்கழநீர்மேடு, கடப்பாக்கம், ஆசானபுதூர், பனப்பாக்கம், கோளூர், பெரியகரும்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாய நிலத்தில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக தொடர் மழையால் நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து நெற்கதிர்கள் நீரில் மூழ்கின.

இழப்பீடு வழங்க கோரிக்கை
தொடரும் மழையால் நெற்பயிர்கள் அழுகும் நிலையிலும் நெல்மணிகள் முளைக்க ஆரம்பித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை துறையினர் விவசாயிகளுக்கு இழப்பீடு் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்