கரூர் அருகே பஞ்சமாதேவியில் பயன்பாட்டில் இல்லாத மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர் அருகே பஞ்சமாதேவியில் பயன்பாட்டில் இல்லாத மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-01-11 01:27 GMT
கரூர்,

கரூர் ஊராட்சி ஒன்றியம், மின்னாம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்மாதேவியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும், சுகாதார முறையில் பெண்கள், இயற்கை உபாதைகள் கழிக்கவும், துணி துவைத்தல் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர கோரினர். அதன்பேரில் அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் மகளிர் சுகாதாரவளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த சுகாதார வளாகம் நல்ல முறையில் பயன்படுத்தி வந்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த சுகாதா வளாகம் பராமரிப்பு செய்யாமல் பழுது அடைந்தது. பின்னர் அவற்றில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி முட்கள் முளைத்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் அந்த சுகாதார வளாகம் பயன்படுத்த முடியாமல் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் இயற்கை உபாதை கழிக்க செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அப்பகுதி பொது மக்களின் நலன் கருதி அந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்