கன்னியாகுமரியில் பலத்த மழை

கன்னியாகுமரியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

Update: 2021-01-11 03:55 GMT
கன்னியாகுமரி,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

நாகர்கோவிலில் நேற்று மதியம் வரை வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. மதியத்திற்கு பின்பு பரவலாக மழை பெய்தது. அதே சமயம் கன்னியாகுமரியில் பலத்த மழை பெய்தது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

இதுபோல், மார்த்தாண்டம், குலசேகரம், கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை என மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் குளுமையான காலநிலை நிலவுகிறது.

கொட்டாரத்தில் 18.2 மி.மீ. பதிவு

மா வட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 18.2 மி.மீ. பதிவாகி இருந்தது.

பிற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண் டி-5.2, களியல்-7, கன்னிமார்-4.2, குழித்துறை-9, மயிலாடி- 3.4, நாகர்கோவில்-2, சிற்றார் 1-1, பேச்சிப்பாறை-2, பெருஞ்சாணி-12.6, புத்தன்அணை-11.8, சுருளகோடு-7, குளச்சல்-3, பாலமோர்-5.4, மாம்பழத்துறையாறு-12.4, ஆரல்வாய்மொழி-3, கோழிப்போர்விளை-12, அடையாமடை-7, குருந்தன்கோடு-7.6, முள்ளங்கினாவிளை-15, ஆனைகிடங்கு-11.4, முக்கடல்-8.3.

அணை நிலவரம்

மழை காரணமாக அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 425 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இதுபோன்று பெருஞ்சாணி அணைக்கு 287 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 169 கனஅடியும், முக்கடல் அணைக்கு 1 கனஅடியும் தண்ணீர் வந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 322 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 150 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. கடந்த சில தினங்களால் மூடப்பட்டு இருந்த பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்