தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் போராட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் போராட்டம் விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கோ‌‌ஷம்.

Update: 2021-01-12 03:25 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் வந்தனர். அப்போது மழை கொட்டியது. கொட்டும்மழையில் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.அப்போது அவர்கள் 2017-2018-ம் கல்வி ஆண்டில் படித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும். கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை மாணவர் நலன் கருதி, உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.இந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வீரையன், மாநகர செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலத்துக்கு சென்று இது தொடர்பான கோரிக்கை மனுவினை கலெக்டர் கோவிந்தராவிடம் அளித்தனர்.


மேலும் செய்திகள்