நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் பறிமுதல்

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்தனர்.

Update: 2021-01-13 12:19 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய கடற்கரை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில், கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள தொகையில் அதிகாரிகள் கமிஷன் பெறுவதாக நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) செபஸ்தியம்மாள் மற்றும் ஊழியர் உள்ளிட்ட பணியாளர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ேசாதனை நடத்தி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்