கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாகூர் கடற்கரை வெறிச்சோடியது

கொரோனா பரவலை தடுக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாகூர் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது.

Update: 2021-01-17 03:03 GMT
நாகூர்,

ஆண்டு தோறும் காணும் பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் கடற்கரையில் கூடி கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க கடற்கரையில் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கூட நாகை மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

வெறிச்சோடி கிடந்தது

இந்த நிலையில் நேற்று காணும் பொங்கலையொட்டி நாகையை அடுத்த நாகூர் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்று அந்த பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாகூர் கடற்கரை வெறிச்சோடி கிடந்தது. 

மேலும் செய்திகள்