கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-01-22 00:28 GMT
கடலூர்,

குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். அதன்படி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் செந்தில் வவேற்றார்.

மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், பரசு. முருகையன், கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாகிகள் பழனிவேல், ஸ்ரீதர், குணத்தொகையன், சக்திவேல், ஜவகர்சுபாஷ், நகர செயலாளர்கள் புலிக்கொடியன், பாலமுருகன், திருமாறன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக குறைந்த பட்ச ஆதார விலை சட்டத்தை இயற்ற வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்