மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-01-23 22:44 GMT
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த சில வாரங்களாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று காலை முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
நீர்மட்டம்
நேற்று அணைக்கு வினாடிக்கு 1,356 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 105.96 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்