தூத்துக்குடியில் மழை நீரை அகற்றும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் மழை நீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-01-24 01:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளம் வீடுகளை சூழ்ந்து கிடக்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

முத்தம்மாள் காலனி, பிரையண்ட் நகர், தனசேகரன் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்து உள்ளனர்.

தீவிரம்

இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்றும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் மோட்டார்கள் வைத்தும், டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீரை உறிஞ்சி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து இருப்பதால் மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிற பகுதிகளில் நேற்று காலையில் பலத்த மழை பெய்தது இதனால் அங்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. காலை 9 மணிக்கு பிறகு மீண்டும் வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்