வேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை எச்.ராஜா பேட்டி

வேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என எச்.ராஜா கூறினார்.

Update: 2021-01-27 06:13 GMT
வடுவூர்,

ராமஜென்ம பூமி தீர்ப்பு அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்ப்பாகும். ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.

வெற்றி

ராமர் கோவில் கட்டுவதில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். இதற்காக அவர்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. பத்து ரூபாய் கூட பங்களிப்பாக பக்தர்கள் வழங்கலாம். அதன் மூலம் கோவில் கட்டுவதை பெருமையாக கொள்கிறோம்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கையில் வேல் ஏந்தி இருப்பதை பா.ஜனதா வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் எந்த ஒரு விவசாயியும் பாதிக்கவில்லை. தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு முதல்- அமைச்சர் தடைவிதித்தது சரியான முடிவு. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

மேலும் செய்திகள்