பசுமை வீடுகள், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனம் கலெக்டரிடம் பொதுமக்கள் முறையீடு

பசுமை வீடுகள், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

Update: 2021-02-04 04:59 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநல்லூர் ஊராட்சியில் பசுமை வீடுகள், சாலை, குடிநீர் தொட்டி, அங்கன்வாடி மையம், வீட்டுமனை இல்லாத குடிசை வாசிகள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வில்லை எனவும், குடிசைகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு அரசின் பசுமை வீடுகள் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.

கடும் நடவடிக்கை

பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் மீது ஓரிரு நாளில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வின்போது மதுராந்தகம் ஆர்.டி.ஓ. லட்சுமி பிரியா, தாசில்தார் துரைராஜன், உதவி திட்ட அலுவலர் அம்பிகாபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், பிரபாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (பொறுப்பு) ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வோட்டூர் ஊராட்சியில் பசுமை வீடுகள் திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த பின்னர் வேடந்தாங்கலுக்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி சென்றார்.

மேலும் செய்திகள்