மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்.

Update: 2021-02-09 19:18 GMT
அரவக்குறிச்சி,


மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோர்களுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கக் கோரி அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் சார்பில், அதன் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

லாலாபேட்டை

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கரூர் மாவட்ட தலைவி கண்ணகி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை மாயனூர் போலீசார் கைது செய்து மாலை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்