அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-11 19:23 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 9 நாளாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. 10-வது நாளான நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் மட்டும் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.  
மருந்தாளுநர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர்கள் கலா, வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் இளவரசன் மற்றும் ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள 4 லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 
அரசுத்துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் சிவபழனி, மாவட்ட இணை செயலாளர் சிங்காரவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்