தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி அரசு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி அரசு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-13 05:06 GMT
பூந்தமல்லி,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் 11-வது மண்டலம், 145-வது வார்டு நெற்குன்றம், பட்டேல் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று 1.14 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலத்தை மீட்டு சமூக நலக்கூடம், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை மீட்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்