நாகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 17,18-ந் தேதிகளில் நடக்கிறது

நாகையில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 17,18- ந்தேதிகளில் நடக்கிறது.

Update: 2021-02-14 05:50 GMT
நாகப்பட்டினம், 

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 17, 18-ந் தேதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

8, 10-ம் வகுப்பு தேர்ச்சி

முகாமில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு, கலை அறிவியல் வணிக பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் கல்வி படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, மின் அஞ்சல் முகவரி மற்றும் சுய விவரக் குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் உடன் முகாமில் கலந்து கொள்ளலாம். குறிப்பாக அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்