பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு : மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் - கமல்ஹாசன்

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவை மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2021-02-15 06:52 GMT
சென்னை,

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீரென 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அண்மையில் 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது அதாவது ஒரே மாதத்திற்குள் இரண்டாதுவ முறையாக மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு பக்கம் சிலிண்டர் விலை உயர்வு மறுபக்கம் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு என ஏழை எளிய மக்களிடையே பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், 

பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75 உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்