வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-17 13:21 GMT
திருவண்ணாமலை

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலவரையற்ற போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

பேராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி வழங்க வேண்டும்.

பதவி உயர்வுக்கு இப்பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட மாவட்ட கலெக்டருக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.

பணிகள் தேக்கம்

பேரிடர் மேலாண்மை மற்றும் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், உதவி கோட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் பெரும்பாலான வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்வேறு பணிகள் நேற்று தேக்க நிலை அடைந்தது.

மேலும் செய்திகள்