தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

வெளிநாட்டில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது

Update: 2021-02-22 17:02 GMT
கமுதி, 
கமுதி அருகே அபிராமம் ஆசாரி தெருவை சேர்ந்த சேது ராஜ் பழனி (வயது 47). பக்ரைனில் கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா தேவி (43). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிளஸ்-2 படித்து வருகிறார். இந்தநிலையில் சேதுராஜ்பழனி திடீரென உயிரிழந்தார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளிடம் அருணாதேவி முறையிட்டார். இதையடுத்து எஸ்.டி.பி.ஐ. ஆதரவு அமைப்பான இந்தியன் சோசியல் போரம் அமைப்பு மூலம் தொழிலாளியின் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.  எஸ்.டி.பி.ஐ. கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தமீம்அன்சாரி,  மாவட்ட செயலாளர் நூருல்அமீன் தலைமையில், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சாயல் நசீர், அபிராமம் நகர் தலைவர் மகாதீர் முகம்மது ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் ேசதுராஜ் பழனியின் உடலை கொண்டுவந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்