வேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்.

வேலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-02-22 17:09 GMT
வேலூர்

வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் நேற்று நேதாஜி மார்க்கெட் மற்றும் சுண்ணாம்புக்காரத் தெருவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 127 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் ரூ.5 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்