பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. போராட்டம்

பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்தது

Update: 2021-02-22 20:27 GMT
பேரையூர்
பேரையூர், திருமங்கலத்தில் பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்தது.
பேரணி
பேரையூரில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகன பேரணி நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் பேரணி முக்குசாலை என்ற இடத்தில் இருந்து ெதாடங்கி உசிலம்பட்டி சாலை வழியாக சென்றது. போலீஸ் நிலையம் முன்பு பேரணி முடிவடைந்தது. பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில, அரசுகளை கண்டித்தும் பேரணியில் கோஷம் எழுப்பப்பட்டது. 
இதில் டி.கல்லுப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் ஞானசேகரன், மாணவரணி மாவட்ட செயலாளர் பாண்டி முருகன், பேரையூர் நகர செயலாளர் பாஸ்கரன், மாணவரணி துணை அமைப்பாளர் வருசை முகமது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சாதிக்பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலத்தில் தி.மு.க. தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி கூறியதாவது, திருமங்கலத்தில் ெரயில்வே மேம்பாலத்திற்கு பூமி பூஜை போட்டது மக்களை ஏமாற்றும் வேலை. மக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதையெல்லாம் அறிந்து மக்கள் வரும் தேர்தலில் அ.தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றார். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்புக்குழு பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராஜா என்ற பெரிய கருப்பன், பவுன்முருகன், ரேகா வீரபாண்டி, ராஜா உள்பட பலர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தானில் தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி நடத்தினர். 
கோஷம்
மேலூரில் தி.மு.க. நகர் செயலாளர் முகமதுயாசின் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. நகர் பொருளாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி இளஞ்செழியன், துணை அமைப்பாளர்கள் அழகுபாண்டி, முருகானந்தம், அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூரில் ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன் தலைமையில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி நடத்தினர். நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணை தலைவர் சங்கீதா மணிமாறன், விவசாய அணி நடராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்