மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை

சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் வருகிற 26-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதையொட்டி மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது

Update: 2021-02-22 20:27 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் வருகிற 26-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதையொட்டி மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
ஜல்லிக்கட்டு
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வருகிற 26-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நடந்தது. மருத்துவ பரிசோதனையில் தகுதி பெற்றவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. 
வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன், மருத்துவ அலுவலர் அருண்கோபி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 30-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்தனர். 
அடையாள அட்டை
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, முக கவசம் அணிந்து வந்தனர். இவர்களுக்கு உயரம், எடை, ரத்த அழுத்தம், பரிசோதனை செய்து மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
மேலும் கொரோனா பரிசோதனை நடந்தது. பின்னர் வருவாய்த்துறை மண்டல துணை தாசில்தார்கள் திருநாவுக்கரசு, கல்யாணசுந்தரம், வருவாய் ஆய்வாளர் அழகுகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அடையாள அட்டை வழங்கினர். 
இதுகுறித்து விழா கமிட்டி செயலாளர் புலவர் தங்கவேல் கூறும்போது, அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு நடத்தி வந்தோம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும் செய்திகள்