தரமணியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தரமணியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Update: 2021-02-23 01:58 GMT
ஆலந்தூர், 

சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் (ஐ.சி.டி.எஸ்.) அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணி ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலகம் முன்பு திரளான பெண் ஊழியர்கள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ ர்கள், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். எங்்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்