கோவில்பட்டி-கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

அரசு உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-23 11:27 GMT
கோவில்பட்டி:
அரசு உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போம் உரிமைகளுக்கான சங்கத்தினர் தெலுங்கானா, பாண்டிச்சேரியில் வழங்குவதை போல் மாற்றுத ்திறனாளிகளுக்கு தமிழக அரசு மாத உதவி தொகயை குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோர்களுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறையில் வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை கண்டறிந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய குடியிருப்பு போராட்டம் அறிவித்தது. 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் சக்கரையப்பன் தலைமையில், குடியேறும் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் 60 பெண்கள் உள்பட 117 பேர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துமாலை, நகர தலைவர் அந்தோணிராஜ், மார்க்சிஸ்ட கட்சி ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் பலர் பேசினார்கள். குடியேரும் போராட்டத்தை யொட்டி மதிய உணவு அங்கேயே தயாரித்து சாப்பிட்டனர்.
கயத்தாறு
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரே மாதத்தில் 2-வது முறையாக நேற்று கயத்தாறு தாலுகா அலுவலக வளாகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் அய்யாத்துரைபாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் ம.தி.மு.க. கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் மரைக்காயர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சாலமோன்ராஜ், விவசாய சங்க ஒன்றிய செயலாளரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான சீனிபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகம் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்