குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

மேலப்பிடாகையில் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-02-23 16:09 GMT
வேளாங்கண்ணி:
மேலப்பிடாகையில் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆகாயத்தாமரை
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சி மேலப் பிடாகையில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் பெரியாச்சிகுளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த குளத்து தண்ணீரை குளிப்பதற்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகள் அந்த குளத்தின் தண்ணீரை பயன்படுத்தி வருவார்கள். தற்போது இந்த குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி புதர் போல் காட்சி அளிக்கிறது இதனால் குளத்தில் இறங்கி குளிக்க முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.
தோல்நோய்
 குளிக்கும்பொழுது பொதுமக்களுக்கு பூச்சிகடியினால் தோல் நோய் ஏற்பட்டு அரிப்பு மற்றும் அலர்ஜி உள்ளிட்ட தோல் நோய்கள்  ஏற்படுகிறது.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு குளத்தில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டு என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்