மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Update: 2021-02-23 19:12 GMT
ராமநாதபுரம்,பிப்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்திட வேண்டும், கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும், தனியார் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு துறையில் 4 சதவீத ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம் தாலுகா குழுக்களின் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் முற்றுகையிட்டு தங்கி இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், பொருளாளர் ஹரிகரசுதன், துணை செயலாளர் நிலர்வேணி, துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட குழு சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்