தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-23 20:47 GMT
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு
திருச்சி, 
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிச்சை எடுத்து போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூரா.விசுவநாதன் தலைமையிலான விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்காததால், கலெக்டர் அலுவலகம் முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், சாலையோரம் மண்டியிட்டப்படி, கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட தலைவர் சுப்பிரமணி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 போராட்டத்தின்போது இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பூரா.விசுவநாதன் கூறியதாவது:-

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி

கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகைக்கடன், பயிர்க்கடன் உள்ளிட்டவைகளை விவசாயிகள் வாங்கி இருக்கிறார்கள். அந்த கடன்களையும் மாநில அரசு நிதியை கொண்டு அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 

தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகளை இந்த அரசு தரம் பிரிப்பதாக தோன்றுகிறது. எனவே, கூட்டுறவு சொசைட்டியில் டாப்செட்கோ மானிய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு, டாப்செட்கோ விவசாய மின் இணைப்பு ஆகியவை காலதாமதம் ஆகாமல் வழங்க வேண்டும். 

குடிமராமத்து பணி ஆய்வு

2020-21-ம் ஆண்டுக்கான குடிமராமத்து பணிகள் சரிவர நடைபெற வில்லை. எனவே, அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக ஏரி தூர்வாரவும், தடுப்பணை கட்டவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்