நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-23 22:03 GMT
நெல்லை:
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தினார்கள்.

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த குடியேறும் போராட்டத்திற்கு சங்க துணை தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமாரசாமி, நிர்வாகிகள் நம்பிராஜன், சங்கரசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 80 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்