உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி

உரம், பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி

Update: 2021-02-24 22:08 GMT
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு வேளாண்மைத்துறையின் அட்மா திட்டம் மூலம் விற்பனை பயிற்சி தொடக்க விழா நடந்தது. இந்த விழா சிவகங்கையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. பயிற்சி மைய இயக்குனர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார். பயிற்சியை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசும்போது, விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரம் விற்பனை செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யும் உர விற்பனையாளர்கள் உரம் மற்றும் பூச்சி மருந்து தொடர்பான முழுமையான தொழில்நுட்பத்தை வல்லுனர்கள் மூலம் பெற்று விவசாயிகளுக்கு சேவை செய்ய இந்த பயிற்சி 48 வாரங்கள் நடத்தப்படுகிறது. இதில் 8 வாரங்கள் நேரடியாக விற்பனையாளர்கள் ஆராய்ச்சி மையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு செயல் விளக்க  பயிற்சி வழங்கப்படும். எனவே இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 48 வாரங்களிலும் தவறாது கலந்து கொண்டு வேளாண்மை பாடத்திட்டங்கள் கற்று விவசாயிகளுக்கு பருவத்திற்கு ஏற்ப தேவைப்படும் தரமான விதை மற்றும் பூச்சி மருந்துகள் வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்