குற்றம் பொறுத்தவர் கோவில் மாசிமக தேரோட்டம்

சு.ஆடுதுறையில் குற்றம் பொறுத்தவர் கோவில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-25 21:19 GMT
மங்களமேடு:

மாசிமக திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவில் மாசிமக திருவிழா, கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை 9 மணி அளவில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு அதிர்வேட்டு, மேளதாளங்கள் முழங்க உற்சவமூர்த்தி தேரடிக்கு கொண்டு வரப்பட்டார். அவர் தேரில் எழுந்தருளியதை தொடர்ந்து, தேரை சுற்றி வாழைமரம், இளநீர், மாங்காய்கள்  ஆகியவை கட்டப்பட்டன.
தேரோட்டம்
மதியம் 2 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. நான்கு முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து, பின்னர் தேரடிக்கு திரும்பியது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். மங்களமேடு இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்