போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலூரில் நாமம்போட்டு, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலூரில் நாமம்போட்டு, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-26 11:20 GMT
வேலூர்

வேலை நிறுத்த போராட்டம்

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தி நேற்று முன்தினம் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அதன்படி நேற்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. 

போராட்டம் குறித்து மக்கள் அறிந்திருந்ததால் 2-வது நாளான நேற்று பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனினும் பல பயணிகள் பஸ்களுக்காக காத்திருந்து சென்றனர். பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.  பல அரசு பஸ்களை டிரைவர்கள் சீருடை இல்லாமல் ஓட்டியதை காணமுடிந்தது. 

பிச்சை எடுத்து...

அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி வேலூர் கிருஷ்ணாநகர் போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று காலை போக்குவரத்து தொழிலாளர்கள் அரை நிர்வாணத்துடன், வயிறு மற்றும் நெற்றியில் நாமம் போட்டு பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது கோவிந்தா... கோவிந்தா... என முழக்கமிட்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரசு தங்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவில்லை. அதனால் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்