3-வது நாளாக கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-26 17:05 GMT
நாகப்பட்டினம்:
 தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு 3-வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோழன், கீழ்வேளூர் வட்ட செயலாளர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹமீதுபாட்சா, மாநில துணைத்தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும்.கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்