41 குழந்தைகளுக்கு ரூ.3¼ லட்சம் பராமரிப்பு உதவித்தொகை

41 குழந்தைகளுக்கு ரூ.3¼ லட்சம் பராமரிப்பு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-02-26 19:47 GMT
சிவகங்கை,

41 குழந்தைகளுக்கு ரூ.3¼ லட்சம் பராமரிப்பு உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார்.

பராமரிப்பு உதவித்தொகை

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 41 குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்திற்கு காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
இளைஞர்நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கும் குழந்தைகள் இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பேச்சு மற்றும் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் அலுவலகப் பணியாளருக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் வீரமங்கை வேலுநாச்சியர் விருதை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயாவிற்கு கலெக்டர் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சைமன் ஜார்ஜ், இளைஞர் நீதிக்குழுமத்தின் உறுப்பினர் பேபிகலாவதி, மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்ரசீந்திரகுமார், மனிதம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் வனராஜன், மாவட்ட முதன்மை பயிற்றுனர் ரேணுகாதேவி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியமூர்த்தி, மகாலெட்சுமி, பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்