கடைகளை அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

கடைகளை அடைத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2021-02-27 00:46 GMT
வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கணபதி, செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில், எம்.பி.சி. பிரிவில் மருத்துவர் சமூகத்துக்கு 5 சதவீத  உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமான முடி திருத்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் எம்.ஆர்.விஜய் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்